Education
· Times read 91

மாற்றத்தை நோக்கிய நமது கல்விமுறை

நமது கல்விமுறையின் அவலங்கள்..
மாற்றங்களை மன்றாடி கேட்கும் நிலையில் தான் நமது இன்றைய கல்விமுறை தள்ளப்பட்டுவிட்டது. வரலாற்றை படைக்க நம் பிள்ளைகளை மறக்க செய்து மதிபெண்ணுக்காக வரலாற்றை படிக்கச் சொல்லிக்கொடுத்து அதில் ஆனந்தம் கொள்ளும் சிறியதொரு மனப்பான்மைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். சமுதாயமும் நம்மிடம் இருந்து வேறெதையும் பெரிதாக எதிர்பார்ப்பதுமில்லை. மனப்பாடம் செய்து செய்து மூளை மழுங்கி மதிப்பெண்ணை பெற்று எந்த அரியணையில் ஏறி ஆட்சி அமைக்க போகிறோம் என்றுதான் புரியவில்லை. பள்ளிகளும் பெற்றோரின் மனதிற்கேற்ப மதிப்பெண்களை குவிக்கச் செய்யும் தொழிற்சாலைகளாக மாறிவிட்டன. கல்வி வியாபாரமாகியதற்கு முக்கிய காரணம் மதிப்பெண்ணின் மீது நாம் கொண்ட மோகம். சமுதாயமும் நமக்கு மதிப்பெண்ணைத் தாண்டிய கல்வியை காட்ட தயக்கம் காட்டாத நாள் இல்லை. காரணம் எதிர்காலம் மதிப்பெண்ணின் கையில் தாரைவார்க்கப்பிபட்டுள்ளது. இவ்வளவு மதிப்பெண் எடுத்தால் அவன் மருத்துவன், இவ்வளவு மதிப்பெண் எடுத்தால் அவன் பொறியாளன் என்பது நமது கல்விமுறையில் சட்டமாகவே மாற்றப்பட்டுள்ளது. மாற்றம் கல்விமுறையின் அடித்தளத்தில் கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் சிக்கி உள்ளது. கல்வி மதிபெண்களுக்கு அப்பாற்பட்டது என்பதை ஆழமாக நாம் உணர வேண்டும். மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுப்பது ஆரோக்கியமான கல்வி முறை அல்ல என்பதை நம் உள்ளங்களில் உணரசெய்யவேண்டும். கல்வி கண்ணை திறப்பதற்கு பதில் கண்ணை மூடிவைத்துக்கொண்டு மனபாடத்தில் மூழ்குவதாய் இல்லாமல் இருக்க வேண்டும். கல்வி முறையில் அரசியல் நிச்சயம் சேர்க்கப்படவேண்டும். நம் வாழ்வில் என்றுமே பயன்படப்போகாத எத்தனையோ பாடங்களை மதிபெண்ணுக்காகப் படிக்கும் நாம் நம் வாழ்வில் அன்றாடம் உள்ள அரசியலை பாடமாக படிப்பது அவசியமானது. விளையாட்டு நேரங்களை கடன் வாங்கி பாடம் எடுக்கும் எந்த ஆசியரின் மீதும் எனக்கு பெருமதிப்பு இருந்ததே இல்லை. காரணம் உரிய நேரத்தில் அவர் பாடத்தை முடிகாததற்கு நாங்கள் ஏன் கஷ்டப்படவேண்டுமென்பது மற்றோன்று விளையாட்டின் மூலம் நாங்கள் பெரும் ஆரோக்கியத்தை உணராத ஆசிரியர் எங்கள் உள்ளங்களில் நோக்கத்தை அறிந்து எப்படி பாடம் நடத்துவார் என்பது. மேலும் கல்வி அறிவை ஆணிவேராக கொண்டு இயங்க வேண்டும், மதிப்பெண்களை அல்ல. கல்வி மாணவனை மனிதனாக மாற்ற வேண்டும், மனப்பாடம் செய்யும் எந்திரமாக அல்ல. கல்வி வியபாரமாவதை தடுக்க நம்மால் இயன்றதை செய்வோம். வரும் தலைமுறைக்கு உரிய உன்னதமான கல்வியை பரிசலிப்போம்.
Did you like this article?

0 0
You need an account to vote on this article. Create a new account over here
About education opportunities, education system, new schemes.


Do you want to write blogs?

Create a free account to start writing blogs immediatly.

Sign up now!
Or login to your account
Login
Do you want to read blogs?

Subscribe to our newsletter to read the best blogs Nobedad has to offer.


Related articles

Comments
You need an account to comment on this article. Create a new account over here.
There are no comments yet..